×

கிருஷ்ணா ஜோடியாக மலையாள நடிகை

சென்னை: ஈவீஈஜி என்டர்டெயின்மென்ட் நஞ்சுண்டப்பா ரெட்டி அன்ட் பிரதர்ஸ் சேர்ந்து வழங்க, கிருஷ்ணா நடிக்கும் புதுப்படத்துக்கு பெயரிடவில்லை. இது காமெடி, ஃபேண்டஸி மற்றும் திகில் ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடக்கிறது. இயக்குனர் ஏ.வெங்கடேஷின் உதவியாளர் துரை.சரவணன் எழுதி இயக்குகிறார். ‘பேராண்மை’, ‘மீகாமன்’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, காந்த் தேவா இசை அமைக்கிறார்.

கிருஷ்ணா ஜோடியாக ஆதியா பிரசாத் நடிக்கிறார். இவர் ‘நிழல்’ உள்பட சில மலையாளப் படங்களில் நடித்தவர். வில்லனாக சந்தோஷ் அறிமுகமாகிறார். தவிர மாறன், இமான் அண்ணாச்சி, ஆதித்யா கதிர், சாம்ஸ், ஏ.வெங்கடேஷ் நடிக்கின்றனர்.

The post கிருஷ்ணா ஜோடியாக மலையாள நடிகை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kṛṣṇa ,Chennai ,EVEG Entertainment ,Nanjundappa Reddy ,Krishna ,A. Venkatesh ,Durai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை...